ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை வராக் கடன் காலமாக கொண்டு செல்கிறது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை வராக் கடன் காலமாக கொண்டு செல்கிறது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, நவ 1- பொருளா தாரத்தின் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந் திய மக்கள் பதிலளிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி னார்.

இது தொடர்பாக கார்கே கூறியதாவது: மோடி அவர்களே உங்கள் அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை வராக் கடன் காலமாக கொண்டு செல்கிறது. இலவ சங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்று கூறிக் கொண்டு பணக்கார நண்பர்களுக்கு சலுகை கிடைக்க சாமானியர்களின் சேமிப்பை இடிப்பது மட்டுமே உங்கள் செயல்திட்டமாக உள்ளது. மார்ச் 2019 முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நிலுவைத் தொகைகள் நாளொன்றுக்கு ரூ.100 கோடி உயர்ந்துள்ளது என்பது உண்மையல்லவா?. கடந்த 9 நிதியாண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி ழிறிகிகளை உங்கள் அரசு தள்ளுபடி செய்யவில் லையா?  உங்கள் அரசாங்கம் குற்றவாளியாக நிற்கிறது.

️இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து ஓடுதல் - நிராவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா, ஜதின் மேத்தா போன்ற கடுமையான பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உதவுதல், முதுகெலும்பை உடைக் கும் விலைவாசி உயர்வை சுமத்துவது, சாதாரண மக்களின் சேமிப்புகளை மூழ்கடிப்பது, அதே நேரத் தில் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது. 

விரக்தியில் உள்ள விவசாயிகள் உதவிக்காக அழும்போது, பாஜக அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது ஆனால் பணக்கார நண்பர்களுக்கு தள்ளுபடி செய்ய நினைக்கும் போது, உங்கள் அரசாங்கம் ஒரு நொடியில் செயலாற்றுகிறது! 2024 ஆம் ஆண்டு பொருளா தாரத்தின் மீது நீங்கள் செய்த ஒவ்வொரு தாக்கு தலுக்கும் இந்திய மக்கள் பதிலளிப்பார்கள். இவ்வாறு கூறினார்

No comments:

Post a Comment