தந்தை பெரியார் சிலை குறித்து வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

தந்தை பெரியார் சிலை குறித்து வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை

கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்லும் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட அலுவலக கட்டடத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி 16.11.2023 அன்று திறந்து வைத்தார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரியார், அறிஞர் அண்ணா குறித்து பேசி வருவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் கொண்டு வந்த பகுத்தறிவு சிந்தனைகளை சட்டமாக கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா.

அண்ணாமலைக்கு இதைப் பற்றி என்ன தெரியும். நேற்று வரை காவல்துறையில் இருந்தார். இன்று ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று வரலாறு தெரியாமல் பேசிக் கொண் டிருக்கிறார்.

அவருக்கு நாவடக்கம் வேண்டும். ஏனென்று சொன்னால், தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்கிறார்.

தந்தை பெரியாரின் சிலை ஏன் அங்கு வைக்கப் பட்டிருக்கிறது என்று சொன்னால், 2000 ஆண்டுகளாக நாங்கள் தனித் தன்மையோடு இருக்கிறோம் என்று ஒரு கூட்டம் இறைவனை காட்டி காட்டியே அனைத்து சமூக மக்களையும் அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள்.

இறைவனை காட்டி அடிமையாக வைத்திருக் கிறீர்களே என்று தந்தை பெரியார் பகுத்தறிவு சிந்தனை யோடு அன்று போர்க் குரல் கொடுத்தார்கள். அந்த போர்க் குரலை மக்கள் ஏற்றுக் கொண்டு அடிமைத் தனத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருக்கிறது என்றால் திராவிட இயக்கம் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததால் தான்.

இதைப் பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு தெரிவ தற்கு வாய்ப்பில்லை. ஊடகங்களின் முன்னால் நின்று கொண்டு வரலாறு பேசுகிறார்.

அதுவும் தவறான கருத்துகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். பெரியாரைப்பற்றி பேசுவதற்கும், அறிஞர் அண்ணாவை பற்றி பேசுவதற்கும் அவருக்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.

- (மின்னம்பலம் இணையதளம், 16.11.2023)


No comments:

Post a Comment