புதுடில்லி, நவ. 25- 13ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை தொடர்ந்து 10 ஆட் டங்களில் தோல்வியை சந்திக்காமல் அசத்தலாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரே லிய அணியிடம் தோல் வியை தழுவி கோப் பையை இழந்தது.
இந்தியாவில் உலகக் கோப்பை தொடரின் ஏற் பாடுகள், மைதான ஒதுக் கீடு, நுழைவுச்சீட்டு விற் பனை என அனைத்திலும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. முக்கியமாக இறுதி ஆட்டத்தில் இந் தியா வெற்றி பெற்றால் பிரதமர் மோடி அரசியல் ஆதாய முயற்சியாக ஒரு பெரிய பிரமாண்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற் பாடு செய்துள்ளார். அதா வது ஒவ்வொரு வீரர்களி டமும் உலகக்கோப் பையை வழங்கி அவர்களு டன் மோடி உரையாடு வது போலவும், ஒன்றிய பாஜக அரசின் முயற்சி மற்றும் தனது (மோடி) செயலால் இந்தியா உல கக் கோப்பை வென்றது போல பல்வேறு நிகழ்ச்சி களுக்கு பயிற்சி எடுத்து பிரதமர் மோடி அகமதா பாத் மைதானத்திற்கு சென்றார்.
மேடை நாகரிகத்தை புதைத்த மோடி
இந்திய அணி தோல் வியை நெருங்கிக் கொண் டிருக்கும் சமயத்தில் பிர தமர் மோடி அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்த பொழுது, அவரை நோக்கி கேமரா திரும்ப ரசிகர்களை நோக்கி புன்னகைத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந் தது போல அவர் கையை அசைத்தார். இந்தியா தோற்கப் போகிறதே என்ற எண்ணத்தில் ரசி கர்கள் துவண்டு கிடந்த நேரத்தில் மோடியின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஆஸ்திரே லிய கேப்டன் கம்மின்ஸி டம் கோப்பை வழங்கும் பொழுது மேடை நாகரி கத்தை அடியோடு புதைத் தார் மோடி.
அரசியல் ஷூட்டிங்
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வின் தேர்தல் பிரச்சாரத் திட்டத்தில் 2 திட்டம் முக்கியமானது. ஒன்று உலகக்கோப்பை. மற் றொன்று ராமர் கோவில். இந்திய அணியின் தோல் வியால் மோடியின் உல கக் கோப்பை திட்டம் அனைத்தும் தவிடு பொடி யாகிய நிலையில், இறுதி முயற்சியாக இந்திய வீரர் கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு தனது கேமரா மற்றும் வீடியோகிராபர் டீமு டன் பிரதமர் மோடி சென்றார். அவருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்றார்.
முதலில் இந்திய அணி யின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோ ருடன் ஆறுதல் வார்த்தை கள் பேசி அவர்களது கைகளை பற்றினார். ஆனால் ரோஹித், கோலி இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி கையை எடுக்கும் முன் னரே இரு வரும் கையை எடுத்து நழுவ முயற்சி செய்தனர். இதனால் கோபமடைந்த மோடி கோபமாக சைகை காட்டினார். அதன்பிறகு முகமது ஷமியை கட்டி யணைத்து ஆறுதல் கூறினார். அவரும் ஏதும் பேசாமலிருக்க மோடி கோபமாக டிரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியே றினார். உலகக்கோப்பை யில் மோடியின் கடைசித் திட்டமும் சுக்குநூறானது.
No comments:
Post a Comment