முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது வழக்கு

திருச்சி, நவ.25  தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப் பியதாக ஓய்வுபெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம், திருச்சி மத் திய மாவட்ட திமுக வழக் கறிஞரணி துணை அமைப் பாளர் ஷீலா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ், வாட்ஸ்-அப் குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் குறித்துஅவதூறாக செய்தி பதிவிட்டுள்ளார். 

அதில், ‘‘இந்துக்கள் வாக்க ளித்துதான் வெற்றி பெற வேண் டுமென்றால், அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குகளைப் பெறும் அளவுக்குதிமுக தரம் தாழ்ந்துவிடவில்லை’’ என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக வும், அது ஒரு செய்தி சேனலில் வந்துள்ளதாகவும் தவறான தகவலைப் பதிவிட்டுள்ளார். 

மேலும், கடந்த 2 ஆண்டு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாடு காவல் துறையினர்  ஆதரவுடன் இடிக் கப்பட்டுள்ளது என்று எக்ஸ் வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டுள்ளார். 

அவரது இந்தப் பதிவு, தமிழ்நாடுஅரசுக்கும், காவல் துறைக்கும்அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், மதக் கலவரங்களைத் தூண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. 

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (கலகத்தை ஏற்படுத் துதல்), 504 (அமைதியை சீர் குலைக்கும் நோக்கில் செயல் படுதல்), 505(2)(இ ருபிரிவின ரிடையே மோதலை உருவாக்கும் வகையில் தீய எண்ணத்துடன் செயல்படுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 பிரிவு 66(டி) (தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன் படுத்துதல்) உள்ளிட்ட 6 பிரிவு களில் இணையதளக் குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment