கள்ளக்குறிச்சி, நவ. 28- திரா விடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரை ஞர் கோ.சாமிதுரை அவர் களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 26.11.2023
ஞாயிறு மாலை 6 மணியள வில் கல்லக்குறிச்சி ஏ.கே.டி தங்கும் விடுதி கூட்டரங் கில் மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன் தலைமை யில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் வரவேற் றார். பொதுக்குழு உறுப் பினர் த.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைத் தலைவர் குழ. செல்வராசு, மாவட்ட கழக, ப.க. தலைவர் பெ. எழிலரசன், மாவட்ட ப.க செயலாளர் வீ.முருகே சன், மாவட்ட ப.க ஆசிரி யரணி தலைவர் கோ.வேல் முருகன், சி.முருகன், பூ.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"பெரியார் - சாமிதுரை சமூக நீதி விருது" கல்லக் குறிச்சி கழக நகர தலைவர் இரா.முத்துசாமி அவர் களுக்கு கல்லக்குறிச்சி ஒன்றிய தி.மு.க செயலா ளர் சி.வெங்கடாசலம் அவர்கள் வழங்கியும் "பெரியார் வீரமணி சமூக நீதி விருது" சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பெ.பாலசண்முகம் அவர்க ளுக்கு திருவண்ணாமலை மாவட்ட காப்பாளர் பட் டாபிராமன் வழங்கியும் விருது பெற்ற இருவருக் கும் ரூபாய் 5000 தொகை யும் கருப்பு சட்டை+ வெள்ளை வேட்டியும் பொருளாளர் குடும்பத் தின் சார்பில் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மாநில மருத்துவ ரணி செயலாளர் கோ.சா. குமார் நன்றி கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட கழக தோழர்க ளுக்கும் பயனாடை அணிவித்தும் சிற்றுண்டி வழங்கியும் விருது வழங் கும் விழா சிறப்பாக நடை பெற்றது.
No comments:
Post a Comment