நடந்தது மறந்து போயிற்றா..?
⭐ மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக யாகம் தொடங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
>> ஏற்கெனவே நடத்திய யாகத்தில் தீ விபத்து நடந்தது மறந்து போயிற்றா?
கலைஞர் கூறியதுதான்...
⭐ இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு நிலையான அரசே காரணம்.
- சொல்லுகிறார் பிரதமர் மோடி
>> ஹிட்லர் கூட நிலையான ஆட்சியைத்தான் நடத்தினார் என்று கலைஞர் கூறியதுதான் நினை விற்கு வருகிறது.
எதன்மீது சட்டப் போராட்டம்?
⭐ ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம்.
- பி.ஜே.பி. அண்ணாமலை
>> ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று ஒன்றிய அரசின்மீது சி.ஏ.ஜி. கூறியிருக்கிறது; அதன்மீது சட்டப் போராட்டமா?
No comments:
Post a Comment