கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.11.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் திமுக இளைஞர் அணி இருசக்கர பிரசார பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஆந்திரப் பிரதேசத்தில் விரிவான ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று நவம்பர் 15 முதல் மூன்று கிராமங்கள் மற்றும் இரண்டு வார்டு தலைமைச் செயலகங்களில் முன்னோடி யாக ஆந்திர அரசு தொடங்கியது.
தி இந்து:
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், தேர்தல் எதிரொலி மட்டுமே பாஜகவை முன்னோக்கி நகர்த்த முடியும் என்கிறார் கட்டுரையாளர் நிஸ்துலா ஹெப்பார்.
மணிப்பூரின் சில மாவட்டங்களில் பழங்குடியினர் அமைப்பு ‘சுயராஜ்ஜியம்’ பிரகடனம் செய்துள்ளது.
தி டெலிகிராப்:
மஹுவா மொய்த்ரா தனது எம்.பி. பதவிக் காலத்தை பொது நலன் கருதி முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் 123 மூத்த குடிமக்கள் கடிதம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment