பெங்களூர் - சிறீராம்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

பெங்களூர் - சிறீராம்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

பெங்களூர், நவ. 4- பெங்களூர் சிறீராம் புரத்தில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘காதல் புரட்சிக்குக் கனிந்த வரவேற்பு’ நூல் வெளியீடு, பு.இர.கஜபதி- செயலட்சுமி இணையர் 65ஆம் ஆண்டு வாழ்வி ணைவு விழா தமிழர்கள் பெரும் அள வில் வாழும் பகுதியில் 29.10.2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு திருவள்ளுவர் சங்கத் தலைவர் புலவர் கி.சு.இளங்கோவன் தலைமையேற்று சிறப்பித்தார். சங்க இணைச் செயலாளர் பொ.இலட்சும ணன், சவுரிசுடர் அனைவரையும் வர வேற்று இணைப்புரை நல்கினார். சங்க மூத்த நிர்வாகி பொன்.சோ.மணி திருக் குறளில் பத்து பாடல்கள் பாடி விழா வினைத் தொடங்கி வைத்தார்.

முதலாவதாக தங்கவயல் செயராசு நூல்களை வெளியிட்டு தந்தை பெரியார் குறித்து சிறப்புரை நிகழ்த் தினார். தோழர்கள் மாசிலாமணி, செயற் குழு உறுப்பினர் மு.இர.பழம்நீ, கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன், துணைத் தலைவர் நாடக ரத்தினா வீ.மு.வேலு, செயலாளர் இரா.முல்லைக்கோ, இதழியல் மூத்த எழுத் தாளர் முத்துமணி, சங்க துணைத் தலை வர் அரங்கநாதன், பொருளாளர் செய வேலு, நூலகர் கண்ணன் ஆகியோர் தந்தை பெரியார் இணையர்களின் மாண்பு குறித்து பேசினர்.

மூத்த அங்கத்தினரில், எழுத்தாள ரும், பெரியார் விருதாளருமான கவிஞர் வ.மன்னன், நூல் குறித்து திறனாய்வு செய்து உரை நிகழ்த்தினார். திருவள்ளு வர் சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் ஒளிப் படத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் மலர் மாலைகளை அணிவித்திருந்தனர்.

தோழர் பு.இர.கஜபதி, பு.செயலட்சுமி இணையருக்கு பயனாடை அணிவித்து, மாலைகளை அணிவித்தும், கருநாடக அடையாளமான மைசூர் தலைப்பாகை அணிவித்தும் சங்கத்தின் சார்பில் பலத்த கரவொலி எழுப்பியும் மகிழ்வித் தனர். பு.இர.கஜபதி ஏற்பரை நிகழ்த்தி னார். நிறைவாக திருவள்ளுவர் சங்க செயலாளர் இரா.பிரபாகரன் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment