ஆளுநர்பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு ப.சிதம்பரம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

ஆளுநர்பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு ப.சிதம்பரம் கருத்து

புதுடில்லி,நவ.25- சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிக்கிறார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10-ஆம் தேதி அன்று நடை பெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக் களை தெரிவித்தது. அன்று நடைபெற்ற விசாணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் 23.11.2023 அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்களின் அதி காரங்களை கொண்டு முறியடித்துவிட முடியாது. ஜூன் 19-ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதிகளில் பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தை மேற்கோள்காட்டிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், "உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மட்டுமல்ல. அனைத்து ஆளுநர் களுக்கும்தான். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, நீதிபதிகளின் கருத்துக்களை ஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும். தேவைப்பட்டால் திறமையான வழக்குரைஞரை அழைத்து விளக்கம் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment