மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,நவ.22- இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில்  20.11.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடும்ப நல அறுவை சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல் வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவர் களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றி தழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அப்போது, அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

குடும்ப நலத் துறை சார்பாக மாநில அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு சிறந்த விருது வழங் கும் திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி கருவள விகிதம் (ஒரு பெண் ணுக்கு கரு உருவாகும் விகிதம்) என்பது 2.1 சதவீதமாக இருந்தது.

தற்போது அது 1.4 என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவி லேயே மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

எதிர்வரும் 2031-2036ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர (சென்செஸ்) அமைப்பு தெரிவித்துள்ளது.

கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்ட தால்தான் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் பொருளாதார விகிதத்தில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத் தில் உள்ளது.

கலந்தாய்வு நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக இருந்த 86 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக் கப்பட்டது.

அந்த இடங்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத் துவ படிப்புகளில் காலியாக வுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பதில் வரவில்லை என்றார் அவர்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத் துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சண்முகக்கனி, குடும்ப நலத் துறை இயக்குநர் ஹரிசுந்தரி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை இயக் குநர் கலைவாணி, காசநோய் பிரிவு கூடுதல் இயக்குநர் அமுதா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment