சென்னை, நவ.26 ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ பள்ளி திட்டக் கண்காணிப்பு குழுவில் மாணவர்களும் இடம்பெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் சுகாதாரமான வளாகங்களை பராமரிக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை கொண்டு வந்தது. இந்த திட்டம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவும், அதற்கான பணிகள் தொடர்பான விவரங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளி யிட்டு இருக்கிறது. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டக் கண்காணிப்பு குழுவில் மாணவர்களும் இடம்பெற வேண்டும். அந்த குழு பள்ளிகளில் உள்ள இளைஞர் சுற்றுச்சூழல் மன்றத்தை மேம்படுத்துவது, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை வகுப்பது, பாதுகாப்பான குடிநீர் வழங்குவ துடன், கழிவு மேலாண்மை குறித்த புரிதலையும் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விடயங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment