“நாம் எடுத்து வைக்கும் அடிகள்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

“நாம் எடுத்து வைக்கும் அடிகள்”

1964ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனம் ‘நாம் எடுத்து வைக்கும் அடிகள்’(Steps)  எவ்வளவு என கணக்கிடும் ‘ஸ்டெப் கவுன்டர்’ என்ற கருவியை கண்டுபிடித்தது.

அந்த ஸ்டெப் கவுன்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த போது அந்த நிறுவனம் “Let’s Walk 10000 Steps A Day”என்ற வாசகத்தை வெளியிட்டது. அதாவது ‘தினமும் 10,000 அடிகள் நடப்போம்’ என்பதுதான் அதன் பொருள். ஜிம்முக்கு சென்றால் கலோரி நிறைய எரிந்து விடும் என நினைத்து செல் கின்றனர். ஆனால் அது சரியல்ல. நாம் தினமும் பல மணி நேரம் அமர்ந்த நிலையில் இருந்தாலும் அவ்வப்போது, எழுந்து நிற்கிறோம், வீட்டில் வேலை செய்வதற்காக சில அடிகள் நடக்கிறோம். அலுவல கத்தில் இருந்தாலும் நாம் நடக்கும் அடிகள் குறைவு தான். நான் தான் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினாலும், கலோரியை எரிக்க சிறந்த வழி நடைப் பயிற்சிதான். தினமும் 10,000 அடி (8-8.5 கி.மீட்டர்) நடந்தால், அதன் மூலம் 300-500 கலோரி எரியும். ஆனால் அது முடியாத பட்சத்தில் 4000 அடிகள், தினமும் வையுங்கள். இதுவே போதுமானது. இதன் மூலம் மருத்துவரை நம்மிடம் நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். காலையில் நடந்தால் உடல் சுறுசுறுப்பு அடையும். உடலின் மேல் படும் சூரிய ஒளி கூடுதல் நன்மை அளிக்கும். அடிகள் எடுத்து வைப்போம். ஆரோக்கியம் காப்போம்.

No comments:

Post a Comment