விக்கிரவாண்டி, நவ. 21- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பெரியார் பெருந் தொண்டரும் சுயமரியாதை சுடரொளியுமான மேனாள் மாவட்ட தலைவர் த. தண்டபாணி அவர்களின் துணை வியார் மேனாள் மத்திய நிர்வா கக்குழு உறுப்பினர் சரோஜா தண்டபாணி (வயது89) உடலுக்கு கழகத்தின் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
இரங்கல் கூட்டத்தினை தலை மைக் கழக அமைப்பளர் தா. இளம் பரிதி தலைமை ஏற்று நடத்தினார்.
நிகழ்ச்சியில் மறைந்த அம் மையார் சரோஜா தண்டபாணி அவர்களின் மகள் செல்வகுமாரி பேசும்போது தந்தை பெரியார் இயக்கம் தான் எங்களுக்கு எல் லாம் நாங்கள் அரசுத்துறையில் வேலை செய்கிறோம் என்றால் அதற்கு காரணம் எங்கள் அப்பா வும், அம்மாவும், இந்த இயக்கமும் தான் என்று உணர்ச்சி ததும்பப் பேசி இரங்கல் உரை நிகழ்த்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை கூட்டதில் வாசிக்கப் பட்டு, அதன் நகலகள் அனைவ ருக்கும் வழங்கப்பட்டது.
இரங்கல் நிகழ்வில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தார்.
இரங்கல் நிகழ்ச்சியில் திண்டி வனம் மாவட்ட தலைவர் இர. அன்பழகன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ. பரந்த £மன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாநில இளை ஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு, திண்டிவனம் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் ந.வா. ஏழுமலை, பொதுக்குழு உறுப் பினர் தா. விஜயலட்சுமி தாஸ், விழுப்புரம் நகர செயலாளர் ச. பழனிவேல், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சையப்பன், மயிலம் ஒன்றிய தலைவர் கணபதிப்பட்டு இரா. பாவேந்தன், மயிலம் ஒன்றிய செய லாளர் தழுதாளி அன்புக்கரசன், கணபதிப்பட்டு தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி தலை வர் கே. பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மு. இரமேஷ், நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம், பெரியார் பற்றாளர் தோழர் கஜேந்திரன், மகளிரணி தோழியர் பா. இலட்சுமி, இ. நிவேதா ஆகியோர் இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மறைந்த சரோஜா தண்டபாணி அவர்களின் மகன் செல்வன் இந்த இயக்கத்திற்கு என்றும் நாங்கள் துணை நிற்போம் நன்றிக்குரிய வர்களாக இருப்போம் என்று கூறி அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். மறைந்த சரோஜா அம் மையாரின் உடல் கழகத் தோழர் களின் வீரவணக்க முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று எவ்வித சடங்குகளுமின்றி அடக் கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment