சீர் மரபினர் நல வாரியம் திருத்தி அமைப்பு தமிழ்நாடு அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

சீர் மரபினர் நல வாரியம் திருத்தி அமைப்பு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, நவ.29 பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரை தலைவராக கொண்டு சீர்மரபினர் நல வாரியத்தை திருத்தியமைத்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.  இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக "சீர்மரபினர் நல வாரியம்", 2007ஆம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.  தற்போது, சீர்மரபினர் நல வாரியத்துக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், ராசா, அருண்மொழி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.  உறுப்பினர்கள் 13 பேர்: அத்துடன் கே.எஸ். ராஜ்,   சேகர், பசுவை சக்திவேல், முனுசாமி, எஸ். கணேசன், கே.எஸ். கண்ணன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்த ராஜ், ப.சந்திரன், சூர்யா பி.தங்கராஜா, பெரி.துரைராசு, பாண்டீசுவரி மற்றும் பெரியசாமி ஆகிய 13 பேரை அரசுசாரா உறுப்பினர்களாக நியமித்து 3 ஆண்டு காலத்துக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment