அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது காஞ்சி, செங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 26, 2023

அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது காஞ்சி, செங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு

காஞ்சிபுரம்,நவ.26- -காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க மான, ஆர்.எஸ்.எஸ். சார்பில், 19.11.2023 அன்று ஊர்வலம் நடந் தது. அதில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத் தினர் சீருடையில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., இயக்க மாவட்ட செய லாளர் பாலாஜி மீது, காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்துள் ளனர்.

'மதம், இன, மொழி, ஜாதி சம்பந்தமாக, மக்கள் விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சித்தார்' எனவும், 'தடைகள் வந்தால் அனைவரும் ஒன்று கூடுவோம் என, அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்' என் றும், உத்திரமேரூர் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி பாஸ்கர் காவல் துறையினர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், இரு பிரிவு களின் கீழ், பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மது ராந்தகத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பில், சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் துண்டு பிரசுரம் வினியோகித்தது தொடர்பாக, மதுராந்தகம் காவல் நிலையத்தில், இருவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தொன்னாடு பகுதியை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். ஊடகப்பிரிவு மாவட்ட செயலர் மணி, 40, என் பவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் செய்யும் நோக்கத்துடன், சமூக வலைதளம் மற்றும் அச்சிடப் பட்ட துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப் பின் வட தமிழ்நாடு தலைவர் குமார சாமி மீது, கிராம நிர்வாக அலு வலர் சண்முகப்பிரியா புகார் அளித்தார். அதன்படி, மதுராந் தகம் காவல் துறையினர், குமார சாமி மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment