ஜெயலலிதாவின் சொத்து மதிப்பீடு அறிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பீடு அறிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்

பெங்களூரு, நவ. 17   ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் 

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரண மடைந்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விடுதலை யாகினர். 

இதற்கிடையே தான் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், தங்க, வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூருவில் உள்ள கருவூ லத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடி காரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன. இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்த மான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு வழக்குரைஞரை நியமனம் செய்துள்ளது. அதன் படி கிரண் எஸ் ஜாவலியை வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந் நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்தில் துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளையில் கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா தனது பெயரில் 2 வங்கி கணக்கு களில் தலா ரூ.25 லட்சத்தை வைப்புநிதியாக (திவீஜ்மீபீ ஞிமீஜீஷீsவீt) வைத்திருந்ததாகவும், ஜெய லலிதா மறைவுக்கு பிறகு அதனை யாரும் உரிமை கோராத காரணத்தினால் இடைநீக்கம் செய்ததாக கனரா வங்கி தரப்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா தெரிவித்தார். கனரா வங்கியின் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. 

அந்த கணக்குகளை மீட்டெடுத்து வட்டியுடன் சேர்த்து பெங்களூகி நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

 அதோடு அபராதத் தொகை, வழக்கு செலவு போக மீதமுள்ள தொகையை வைத்து தமிழ்நாட் டில் கழிவறைகள் கட்டலாமே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது


No comments:

Post a Comment