திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் - சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் - சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு

திராவிடப் பேரொளி, திராவிட முன்னோடி அறிஞர்  அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு முழுவுருவச் சிலையை அமைத்தும், அவருடைய மணிமண்டபம் அமைத்தும் சிறப்பாக 'திராவிட மாடல்' முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதும், பாராட்டுக் குரியதும், வரலாற்றுப் பெருமைக்குரியதுமாகும்.

பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் திராவிட முன் னோடியாகத்   திகழ்ந்ததை தந்தை பெரியார் அவர்கள், கோலார் தங்கவயலிலேயே, அப்பாதுரையார் அவர்கள்  தலைமையில் நாங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில்,  பேசியபொழுதே, அதைக் குறிப்பிட்டுச் சிறப்பாகச் சொன்னார்கள்.

பவுத்தம் என்ற புத்தநெறி, தமிழ்நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் வளர்வதற்கு அடித்தளமிட்டவர்களில் அவர் மிக முக்கியமானவர்.

திராவிடம் வேறு - புத்தம் வேறு அல்ல. இரண்டும் பகுத்தறிவு, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. அதைத்தான் ஆரம்பத்திலேயே உணர்த்தினார் அயோத்தி தாசப் பண்டிதர்.  அவருடைய பெயராலே மணிமண்டபம் அமைவதும், உருவச் சிலை அமைக்கப்படுவதும் - அதை இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பதும் என்றென்றைக்கும் திராவிட இயக்கத்தில் ஒரு வரலாற்றுப் பொன்னேடாகும்.

வாழ்க அயோத்திதாசர் புகழ்!

வளர்க அவர் காண விரும்பிய புதிய ஜாதியற்ற, பேதமற்ற திராவிட சமுதாயம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.11.2023 


No comments:

Post a Comment