தொழில், முதலீட்டு மேம்பாடு மற் றும் வர்த்தக துறை செயலாளர் அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நிலத்தின் விலை, வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அருகில் உள்ள ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, பன்னாட்டு பசுமை விமான நிலையத்தை உருவாக்கும் இட மாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
20 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தவும், 1,972.17 ஏக்கர் அரசு நிலத்தை டிட்கோ வுக்கு ஒப்படைக்கவும் அரசுக்கு காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் முன்மொ ழிவை அனுப்பினார். அதில் 1,085.62 ஏக்கர் நிலம் நஞ்செய் நிலமாக உள்ளன.
இவற்றையும் ஆர்ஜிதம் செய்வதற் கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மிகவும் அதிக அளவில் நில ஆர்ஜிதம் நடைபெறுவதால், கூடுதல் பணியாளர் களையும், சிறப்பு அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும், வாடகை வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என்று அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.
மேலும் இதற்கு ஒரு ஆண்டுக்கான செலவாக ரூ.19.25 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, அவர் கேட்டுக் கொண்டபடி 2 ஆண்டுகளுக்கு தேவை யான 326 தற்காலிக சிறப்பு பணியிடங் களுக்கான அனுமதியையும், ரூ.19.25 கோடி நிதியை அனுமதித்தும் அரசு உத்தரவிடுகிறது. அதுபோல, 5,746.18 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில்களுக்கான நில ஆர்ஜித சட்டத்தின் படியோ அல்லது தனிப்பட்ட பேச்சு வார்த்தை மூலமாகவோ ஆர்ஜிதம் செய்வதற்கான அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment