செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

செய்திச் சுருக்கம்

உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக 11.85 லட்சம் பேர் மீண்டும் மனு செய்துள்ளனர். இவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரவு

பொது இடத்தில் ஜாதி பெயரை குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்வு

18 சதவீதம் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ள நிலையில் பதிவு அஞ்சல்கள் உட்பட அனைத்து அஞ்சல் சேவைகளுக்கும் கட்டணம் உயர்வு செய்யப் பட்டுள்ளது.

நியமனம்

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் பணிகளை மேற்கொள்ள 23,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தகவல்.


No comments:

Post a Comment