தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் மத்தியப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் மத்தியப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்பு

போபால், நவ.16  மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக் கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

அதன் விபரம் வருமாறு:  மத்தி யப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் மத்தியப் பிரதேச மாநில சட்ட மன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

 இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட உள்ளது. மத்தியப் பிரதே சத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் முதலில் காங் கிரஸ் கட்சி ஆட்சியமைத்தாலும் கூட ஜோதிர்ஆதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.  சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகிறது. அதேவேளை யில் காங்கிரஸை தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் மத்தியப் பிரதேச தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப் புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனவும், எந்த கட்சியை ஆட்சியில் அமைத் தாலும் நூலிழை அளவில் தான் சட்டமன்ற உறுப்பினர்களின் வித்தியாசம் என்பது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான்  LokPoll  சார்பில் மத்தியப் பிரதேச சட்ட மன்றத் தேர்தலுக்கான _தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 72,405 பேரிடம் இந்த கருத்து கணிப்பு  மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவு  தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்துக் கணிப்பு  பாஜகவுக்கு அதிர்ச்சி யளிக்கும் வகையிலும், காங்கிரசுக்கு உற்சாகம் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அதாவது மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 

அதன்படி மொத்தம் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங் கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத ஓட்டுகளை பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாறாக பாஜக 39 முதல் 41 சதவீத ஓட்டுக் களுடன் 84 முதல் 98 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் 8 முதல் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளை கைப் பற்றலாம் என இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித் துள்ளன.


No comments:

Post a Comment