250 கனஅடி வெளியேற்றம்
மேட்டூர் அணைக்கு கடந்த 5ஆ-ம் தேதி விநாடிக்கு 1,845 கன அடியாக இருந்த நீர்வரத்து 7ஆ-ம் தேதி 2,702 கனஅடியாக அதிகரித் தது. இந்நிலையில், தொடர் மழை யால் நேற்று காலை விநாடிக்கு 6,498 கனஅடியாக இருந்த நீர் வரத்து, மாலை 4 மணிக்கு 7,563 கனஅடியாக அதிகரித்தது.
குடிநீர் தேவைக்காக மட்டும் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலைமுதல் 250 கனஅடியாக குறைக்கப்பட்டுள் ளது.
அணையில் இருந்து திறக்கப் படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர் மட்டம் தற்போது 54.85 அடியா கவும், நீர்இருப்பு 21 டிஎம்சியாகவும் உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல் காவிரி ஆற்றில் கடந்த 6ஆ-ம் தேதி காலை விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் (7.11.2023) காலை விநா டிக்கு 5,000 கனஅடியாகவும், மாலை 6,000 கனஅடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 8,000கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 14,000 கனஅடியாகவும் உயர்ந்தது.
No comments:
Post a Comment