‘மாநில சுயாட்சி; உண்மை யான கூட்டுறவு கூட்டாட்சியியலுக்கான எனது குரல்’ என்ற தலைப்பில், ‘இந்தியாவுக் காக பேசுகிறேன்’ என்ற குரல் பதிவின் 3ஆ-ம் பாகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (31.10.2023) பேசியதாவது:
கடந்த செப்.23ஆ-ம் தேதி வெளியான 2ஆ-ம் பாகத்தில் சிஏஜி அறிக்கை குறித்து பேசியிருந்தேன். அவையெல்லாம் உண்மை என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொள்வது போல் ஒரு விஷயத்தை செய்துள்ளனர்.
நாடு முழுவதும், இந்த குரல் பதிவு சென்றடைந்த பின், அக்.2ஆ-ம் வாரத்தில், பாஜக அரசின் ஊழல்களை வெளிக் கொண்டுவந்த சிஏஜி அதிகாரி கள் செப்.12ஆ-ம் தேதியே கூண்டோடு மாற்றப்பட்டுள் ளனர். தற்போது நான் பேசப் போவது மாநில உரிமைகள். திமுக தனக்கென்று தனித்துவ மான கொள்கையுடன் 75ஆ-வது ஆண்டு விழாவை கொண்டாடும் கட்சி மட்டுமின்றி, நாடாளுமன் றத்தில் 3ஆ-வது பெரிய கட்சி யுமாகும்.
அப்படிப்பட்ட திமுகவின் கொள்கைகளில் முக்கியமா னது மாநில சுயாட்சி.
மாநில உரிமைகளை பறிக்கும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமை களுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமரா னபின், மாநில உரிமைகளைப் பறிக்கிறார்.
மாநிலங்களை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகராட்சிகளாக மாற்றிவிட வேண்டும் என்று பாஜக அரசு நினைக்கிறது. டில்லியை மய் யப்படுத்தாமல் மாநிலங்க ளுக்கு ஏற்ற அணுகுமுறையுடன் திட்டங்கள் தீட்டப்படும் என்று கூறிய பிரதமர், திட்டக்குழுவை கலைத்துவிட்டு சத்தே இல்லாத நிதி ஆயோக்கை உருவாக் கினார்.
கூட்டாட்சி கருத்தியலை ஆதரிப்பவன் என்று கூறினார். ஆனால், மாநில அரசின் திட் டங்களை நிறைவேற்ற கூட ஒன்றிய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனர்.
மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்கு வோம் என்றார். ஆனால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லி விட்டார். இதனால் மாநிலங்க ளின் நிதி நிலைமை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.
மேலும், 12ஆ-வது நிதி ஆணையத்தில் இருந்து நிதி குறைந்ததால், கடந்த 19 ஆண்டு களில் தமிழ்நாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது. இனிமேல் ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படப்போகிறது. இந்த நிலை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; எல்லா மாநிலங்களி லும் உள்ளது.
ஆளுநரை பா.ஜ.க. பயன்படுத்துகிறது
ஆளுநர் மாளிகையை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குகின்றனர். அதனால் தான், தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றி அனுப் பிய 19 மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்காமல் இருக்க ஆளு நரை பாஜக பயன்படுத்துகிறது.
மொத்தத்தில், பாஜக ஆட் சியில் மாநில உரிமைகள் நசுக் கப்பட்டுள்ளன. இவர்கள் செய்வதில் மிகவும் மோசமா னது மாநிலங்களின் கல்வி உரி மையில் தலையிட்டு, குழந்தை களின் எதிர்காலத்துடன் விளையாடுவதுதான். இவற் றில் இருந்து நம்மை பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம் மாநில சுயாட்சிதான்.
அதனால்தான், அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து நானும் வலியுறுத்தி வருகிறேன். கடந்த 1974இ-ல் கலைஞரின் ஆட்சியின் போது, மாநில சுயாட்சி தீர்மானம் சட்டப் பேரவையின் இரண்டு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை அப் போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்த முக்கியமான பிரச்சினை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என் றார்.
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
தி.மு.க.வின் கொள்கை களில் கலைஞர் தெரிவித்த 5ஆ-வது முழக்கம், ‘மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி’. இந்த குரலை அனைவரும் எதிரொ லித்தனர். இன்று மத்தியில் ஆட்சியின் கடைசி கட்டத்தில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பும் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது.
அதனால்தான் அவர்கள் சட்டப்படி ஆட்சியும் நடத் தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை. இப்படி, மாநி லங்களை செயல்பட விடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் ஊதியத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை வைத்துக் கொண்டே எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எதிர்க் கட்சி ஆளும் மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, மத்தியில் அமைந்தால் எல்லா மாநிலங் களும் மேலும் செழிக்கும். மாநில சுயாட்சி கொள்கை வெல்ல, "இண்டியா" கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.
அதற்கு மக்கள் தயா ராக வேண்டும். 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் மக்கள் இதை மனதில் வைத்து வாக் களிக்க வேண்டும். "இண்டியா" கூட்டணியின் கையில், இந் தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்; இந்தியாவைக் காப்போம் என்றார்.
No comments:
Post a Comment