மக்களை தவறாக வழிநடத்துகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள முதலமைச்சர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

மக்களை தவறாக வழிநடத்துகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள முதலமைச்சர் அறிக்கை

திருவனந்தபுரம். நவ. 27- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள மக்க ளைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்று அந்த மாநில முதலமைச் சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கேரளத்துக்கான நிதியுதவி மற்றும் மானி யங்களை வழங்க ஒன்றிய பாஜக அரசு மறுப்பதாக அந்த மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டை அண்மையில் மறுத்த ஒன்றிய அமைச்சர் நிர் மலா சீதாராமன், ‘கடந்த 2009-20-10-ஆம் ஆண்டு முதல் 2023--2024-ஆம் ஆண்டு வரை, நிதிக்குழு மானியங்கள் அதிக அளவு கேரளத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தேவை யான அளவுகோல்களை மாநில அரசு பூர்த்தி செய்யாததால், பல்வேறு பிரிவுகளின் கீழ், கேரளத் துக்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை’ என்றார். 

இந்நிலையில், கேர ளத்தில் உள்ள கோழிக் கோடு மாவட்டத்தில் 26.11.2023 அன்று மாநில அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல மைச்சர் பினராயி விஜ யன், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றை மறுத்து தெரிவித்ததாவது: 

கேரளத்தின் நிதி தேவை குறித்து மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு எழுத்துபூர்வ மாக பலமுறை தெரியப் படுத்தினார். கேரளத் துக்கு உள்ள நிதி நெருக் கடி குறித்து நிர்மலா சீதா ராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்தும் பாலகோபால் எடுத்துக் கூறினார். மாநிலத்தின் நிதி தேவை குறித்து பிர தமர் மோடியின் கவனத் துக்கு நான் கொண்டு சென்றேன். இந்த உண் மைகளை மறைத்து கேரள மக்களை நிர்மலா சீதாராமன் தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார். அவரின் கூற்று தவறா னது; அடிப்படை ஆதார மற்றது என்றார்.

No comments:

Post a Comment