சமூக ஊடகத் தகவலை வைத்து பொது நல வழக்கைத் தொடுக்க முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சமூக ஊடகத் தகவலை வைத்து பொது நல வழக்கைத் தொடுக்க முடியாது!

மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

மும்பை, நவ.30  சமூக ஊடக தக வலை வைத்து பொது நல வழக்கை தொடுக்க முடி யாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது.

மும்பையைச் சேர்ந்த வழக் குரைஞர் அஜித்சிங் கோர்படே. இவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந் தார். 

அதில் அவர் கூறியதாவது: 

மகாராட்டிராவின் வசாய் பகுதி யில் உள்ள துங்கரேஷ்வர் அருவி, ராய்காட் பகுதியில் உள்ள தேவ் குந்த், திரியம்பகேஷ்வரில் உள்ள துகர்வாடி, பல்கர் மாவட்டம் ஜவகர் பகுதியில் உள்ள கல் மாண்ட்வி போன்ற நீர் நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 பேர் முதல் 2,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். உடல் களை மீட்க பல நாள்கள் ஆகின்றன. இது அடிப்படை உரிமை, சம உரிமை, வாழ்வுரிமை ஆகிய சட் டப் பிரிவுகளை மீறுவதாக உள்ளது. மாநிலத் தில் உள்ள பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர் நிலைகள் ஆபத்தான வையாக உள்ளன. அங்கு வேலி மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லை. எனவே விபத்துகளைத் தடுக்க நீர் நிலைகளில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு உத்தர விட வேண்டும். 

இவ்வாறு பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை மும்பை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத் யாயா, நீதிபதி ஆரிப் டாக்டர் ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது. அப்போது உயி ரிழப்பு தொடர்பான தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என நீதிபதி கள் கேள்வி எழுப் பினர். 

இதற்கு மனுதாரர் அஜித் சிங்கின் வழக் குரைஞர்கள் மணீந்திர பாண்டே மற்றும் ஆயுஷி சவுகான் ஆகியோர், ‘‘சமூக ஊடகங் கள் மற்றும் செய்தித்தாள்களில் இருந்து இந்த தகவல்கள் திரட்டப்பட்டன’’ என்றனர். 

அதன்பின் நீதிபதிகள் கூறிய தாவது: 

சமூக ஊடகங்களில் வரும் தக வல்களை வைத்து பொதுநல வழக்கு தொடர முடியாது. நீதிமன்றத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அதற்கு அடிப் படை ஆதா ரம் என்ன? பொது நல வழக்கு தாக்கல் செய் யும்போது பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. சிலர் பிக்னிக் சென்று நீர் நிலைகளில் மூழ்குகின்றனர். அதற் காக பொது நல வழக்குத் தொடுப்பதா? சிலர் விபத்தில் நீரில் மூழ்கலாம். இதில் உரிமை மீறல்கள் எங்கே இருக்கிறது? இந்த மனுவில் தெளிவான விவரங்கள் இல்லை. தகுந்த புள்ளி விவரங் களுடன் பொது நல மனுவை தாக்கல் செய் யுங்கள். 

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment