"ஒளியை மங்கவைத்த ஏழ்மை" அயோத்தி தீபோற்சவ மறுபக்கத்தை பகிர்ந்த அகிலேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

"ஒளியை மங்கவைத்த ஏழ்மை" அயோத்தி தீபோற்சவ மறுபக்கத்தை பகிர்ந்த அகிலேஷ்

அயோத்தி, நவ..16 உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட 'கின்னஸ் சாதனை'  நிகழ்வுக்குப் பின் விளக்கில் மீதமிருக்கும் எண்ணெயை ஏழைக் குழந்தைகள் சேகரிக்கும் காட்சிப் பதிவை  பகிர்ந்துள்ள அம்மாநில மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் "தெய்வீகத்துக்கு மத்தியில் ஏழ்மை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், விளக்குகளில் மீதமிருக்கும் எண்ணெயை ஏழைக் குழந்தைகள் சேகரிக் கின்றனர். அப்போது காவலர்கள் அவர்களை விரட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிப் பதிவை பகிர்ந்து, "தெய்வீகத்துக்கு மத்தியில் ஏழ்மை. ஏழ்மை ஒருவரை எரிந்த விளக்குகளில் இருந்து எண்ணெய் சுமக்க வைக்கும் நிலையில் இருக்கும்போது, கொண் டாட்டத்தின் ஒளி என்பது மங்கிவிடும். எங்களின் ஒரே விருப்பம் இதுபோன்ற ஒரு திருவிழா வர வேண்டும். ஆனால் அதில் கிடைக்கும் வெளிச் சத்தால் இதுபோன்ற இடங்கள் மட்டுமல்ல, ஏழையின் வீடும் ஒளிர வேண்டும்" என்று அகிலேஷ்  தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில், ஒரு பெண் விளக்கில் இருந்து எண்ணெய்யை சேகரிக்கும் போது காவலர் ஒருவர் அவரை மிரட்டுவதும், அப்போது அப்பெண் கையெடுத்து கும்பிடும் காட்சிகளைப் பகிர்ந்துள்ள அகிலேஷ்  "அப்பெண் உதவியற்றவர் என்பதால் கைகளைக் கூப்பி அனுமதி கேட்கிறார். ஏழைகளின் திருவிழா எப்போது?" எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவுகள் பெரும்பாலோரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.



No comments:

Post a Comment