சென்னை,நவ.30- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட் டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்று லாப் பயணம் மேற்கொள்ள முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கொடிய சைத்து வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.11.2023) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து களின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங் கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட் டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்று லாப் பயணம் மேற்கொள்ள அச்சுற் றுலாப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவி களை வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழ கத்தின் சார்பில் ஊட்டி, கொடைக் கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-_மாமல் லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், புதுச்சேரி, என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலாப் பயண திட்டங்களும். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலாப் பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலாப் பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகை யான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசுப் பேருந்துகள், உயர்தர சொகுசுப் பேருந் துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசுப் பேருந்துகள், என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சுற்றுலாக்கள் குறித்த தகவல்கள், முன்பதிவு ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கவும் மற்றும் சுற்றுலாவின்போது ஏற்படும் குறைகளை களையவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சுற்றுலா உதவி மய்யம் மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது.
2023-_2024ஆம் ஆண்டிற்கான சுற்று லாத் துறை மானியக் கோரிக்கையில், திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்று லாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலாப் பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, பூவிருந் தவல்லி - பார்வைத்திறன் குறைவுடை யோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம்- செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடு நிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானி டோரியம் அறிவுசார் குறையுடையோ ருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள அச்சொகுசு சுற்றுலாப் பேருந்துகளை கொடிய சைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.
மேலும் அவர் பேருந்தில் ஏறி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் உரை யாடினார். மாணவர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
பி.கீதா ஜீவன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன் மைச் செயலாளர் டாக்டர் க. மணி வாசன், முதன்மைச் செயலாளர் / சுற்றுலா ஆணையர் மற்றும் தலைவர்/ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் ஜெயசிறீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக் குநர் கமல் கிஷோர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment