நிலவில் ஏன் இயல்பாக நடக்க முடியவில்லை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

நிலவில் ஏன் இயல்பாக நடக்க முடியவில்லை?

நிலவுக்கு பூமியில் இருக்கும் கடல் நீரை இழுக்கும் ஆற்றல் இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் ஏன் மனிதனால் இயல்பாக நடக்க இயலவில்லையே?

நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், நிலவின் ஈர்ப்பு விசையை நம்மால் உணர இயலாது. கடல் போன்ற பரந்த பரப்பில்தான் நிலவின் விசையை அறியமுடியும். அதாவது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, கடல் அலைகளைப் போல் நம்மை நிலவால் இழுத்துவிட முடியாது. பூமியின் ஈர்ப்பு விசை அதிகம் என்பதால், நிலவின் ஈர்ப்பு விசை நம் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் ஒரு பகுதியாக இருக்கிறது. அதனால்தான் நிலவில் நாம் மெதுவாகத் தரைக்குச் செல்வோம். இயல்பாக நடக்க முடியாமல் தடுமாறுவோம்.

ஏன்? எதற்கு? எப்படி?

யாராவது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது,  தலை முடியை விரித்துப் போட்டிருந்தால், கட்டச் சொல்கிறார்கள். வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால், சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு செல்லச் சொல்கிறார்கள். இடி இடிக்கும் போது முதல் குழந்தை என்பதால் அர்ஜுனன் பேர் பத்து என்று சொல்லச் சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் அவர்கள் சொல்வதை எல்லாம் மறுப்பின்றி செய்துகொண்டே தான் வந்த வர்கள் இப்போது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் செய்யச் சொல்வதைச் செய்ய மாட்டேன் என்கிறார்களே?

எல்லாவற்றையும் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்று அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டில் உள்ளவர்கள் முன் னோர்கள் வழிவழியாகச் சொல்லிவந்த விஷயங்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அன் றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை எவ்வளவோ விதங்களில் மாற்றங்களைச் சந்தித்திருக் கிறோம். அறிவியலில் முன்னேறியிருக்கிறோம். நாம் படித்து அறி வைப் பெருக்கிக் கொள்ளும்போது, இவை போன்ற கேள்விகள் வருவது இயல்புதான். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பது, சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ப தையே காட்டுகிறது. பக்குவமாக வீட்டில் உள்ளவர் களுக்குப் புரிய வைத்தால், புரிந்துகொள்வார்கள்.

No comments:

Post a Comment