வர்த்தக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

வர்த்தக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு

சென்னை, நவ.2  வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101.50 அதிகரித்து ரூ.1,999.50-க்கு விற்பனை ஆகிறது. 

பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் அமெ ரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற் றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோ றும் நிர்ணயிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை பன் மடங்கு உயர்ந்தது. பின்னர், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங் கியது. இதையடுத்து, பெட்ரோல், டீசல், சிலிண் டர் விலை சிறிதளவு குறையத் தொடங்கின. 

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ்தீவிரவாதிகள் இடையே நடந்துவரும் போர் காரணமாக, பன்னாட்டு சந்தையில் கச்சா எண் ணெய் விலை அதிகரித் துள்ளது. எனினும், பெட் ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. 

அதே நேரம், வர்த்தக பயன்பாட்டுக்கான சமை யல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்படி, 19 கிலோ எடை உள்ள வர்த் தகப் பயன்பாட்டு உருளை விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது. இத னால், அதன் விலை ரூ.1,898இ-ல் இருந்து ரூ.1,999.50 ஆக அதிகரித் துள்ளது. 

கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப் பிடத்தக்கது. தீபாவளி விழா நெருங்கும் நிலை யில், வர்த்தகபயன்பாட்டு எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், இனிப்பு பலகாரங்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல, உணவகங் களிலும் உணவுப் பொருட்கள் விலை அதி கரிக்கக்கூடும் என பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என்பது சற்று ஆறுதலாகக் கருதப்படு கிறது.

No comments:

Post a Comment