நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுடில்லி, நவ.22  காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-ஆவது கூட்டம் நாளை (23.11.2023) டெல்லியில் கூடு கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் காணொலி காட்சி  மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங் காற்று குழு அமைக்கப்பட்டது; இந்த குழுவானது கருநாடகாவின் மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை கவனத் தில் கொண்டு தமிழ்நாட்டுக் கான காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணை யத்துக்கு பரிந்துரைக்கும். இதனை உத்தரவாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும். இந்த ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த எந்த உத்தரவையும் கருநாடகா அரசு மதித்து நடக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை முறைப்படி கருநாடகா திறந்து விடவில்லை. தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு, உள்ளிருப்பு போராட் டங்கள்தான் கருநாடகாவில் தொடர்ந்து நடைபெறு கின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 27-ஆவது கூட்டம் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடிநீரை திறந்துவிட கர்நா டகாவுக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் 1 முதல் நவம்பர் 23-ஆம் தேதி வரை இந்த நீரை திறக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் காவிரியில் கரு நாடகா அரசு, தமிழ்நாட்டுக் கான நீரை முழுமையாக திறந்துவிடவில்லை.   

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட் டுக்கு காவிரி நீர் திறக்கப்பட்ட அளவு உள்ளிட்டவை குறித்து ஒழுங்காற்று குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா மற்றும் புதுவை மாநில அதி காரிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்க உள்ளனர்.


No comments:

Post a Comment