பசுமைப் பள்ளி திட்டத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

பசுமைப் பள்ளி திட்டத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

சென்னை.நவ.25- தமிழ்நாடு அரசின் ஆதரவோடு கட்டடங் களில் இருந்து கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்கும் திட்டம் சென்னையில் நடைபெறும் பசுமை கட்டடம் குறித்த அகில இந்திய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதன்படி இனி கட்டடம் கட்டும்போது அந்த கட்டடம் முழுவதும் கார்பன் உமிழ்வை வெளியிடதாக கட்டடமாக இருந்தால் அதற்கான தரவரிசை அளிக்கப்படும்.  மூன்று நாள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் நேற்று (24.11.2023) இந்தியா முழுவதிலும் இருந்து கிரீன் யுவர் ஸ்கூல் திட்டத்தின் வெற்றியாளர் களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இந்திய தொழில் கூட்ட மைப்பு, இந்திய பசுமைக் கட் டடம் கவுன்சில் (அய்ஜிபிசி) ஆகியவை தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற் கான இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய நட வடிக்கையாக நாட்டின் முதல் ‘நிகர ஜீரோ கார்பன்’ மதிப்பீட்டு முறை அறிவிக்கப்பட்டது.  இதற்கான வழிகாட்டுதல்களை இந்திய பசுமை கட்டட கவுன்சிலின் தேசிய தலைவர்  குர்மித் சிங் அரோரா, சென்னை பகுதி தலைவர் அஜித் சோர்டியா,  ஆலிவர் பால்ஹட்செட் ஆகி யோர்  வெளியிட்டனர்.   

சென்னைக்கான பிரிட்டிஷ் உயர் துணை ஆணையர் ஜம்ஷித் என் கோத்ரேஜ், சிஅய்அய் தலைவர் சோஹ்ராப்ஜி கோத்ரேஜ்,   பசுமை பள்ளி திட் டத்திற்காக  இளம் மனங்களில் பசுமை உணர் வைத் தூண்டும் ஒரு ஒற்றை முழக்கத்துடன் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பசுமை உங்கள் பள்ளி திட்டமும் மாநாட்டில் தொடங்கப்பட்டது.

No comments:

Post a Comment