சென்னை - திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

சென்னை - திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை,நவ.16-பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியா ழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப் பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தி யில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர்-திருநெல்வேவி இடையே வியாழக் கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன் விவரம்: சென்னை எழும்பூரில் இருந்து நவ.16, 23, 30, டிச.7, 14, 21, 28ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) காலை 6 மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் (06067) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வே லியை சென்றடையும். 

மறுமார்க்கமாக, திருநெல் வேலியில் இருந்து நவ.16, 23, 30, டிச.7, 14, 21,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்(06068) புறப்பட்டு, அதே நாள் இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்த டையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலை யங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கி விட் டது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment