செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்;
பார்ப்பான் மட்டும் படிக்கணும்; இதுதானே மனுதர்ம யோஜனா எனும் ஜாதிக் கல்வித் திட்டம்!
தாராபுரம், நவ.2 செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும்; இதுதானே மனுதர்ம யோஜனா எனும் ஜாதிக் கல்வித் திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தாராபுரம், பழனி பகுதிகளில் தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் முன் மனுதர்ம யோஜனா என்பதைப் பற்றி விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.
தாராபுரம் மாவட்டம் பெதப்பம்பட்டி
மனுதர்ம யோஜனா என்ற குலத்தொழிலை திணிக் கும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பெரும் பயணத்தில் இரண்டாம் கட்டம் இரண்டாம் நாளில் 1.11.2023 அன்று தாராபுரம் மாவட்டம் பெதப் பம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள புலவர் கடவுள் இல்லை நினைவுத் திடலிலும், இரண்டாம் கூட்டம் பழனியில் ஆர்.எப். சாலையில் தந்தை பெரியார் திடலிலும் சிறப்பாக நடைபெற்றது.
முதல் கூட்டமான பெதப்பம்பட்டியில் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் ஜெ.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் ஆ.முனீஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் த.சண்முகம், நா.சக்திவேல், உடுமலை ஒன்றிய செய லாளர் சி.கந்தவடிவேல், மாவட்ட தொழிலாளரணி மா.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கி.இளந்தென்றல், உடுமலை நகரச் செயலாளர் வே.கலை யரசன், வெள்ளக்கோவில் பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் பெரியார் ஜெகன், கோவை மாவட்டச் செயலாளர் புலியகுளம் க.வீரமணி, மடத்துக்குளம் ஒன்றிய செய லாளர் மா.தங்கவேல், உடுமலை நகரத் தலைவர் தி.வெங் கடாசலம், தாராபுரம் நகரச் செயலாளர் மா.முத்தரசு, மாவட்டத் துணைத் தலைவர் கே.என்.புள்ளியான், பொள் ளாச்சி தோழர் பொறியாளர் பரமசிவம், கோபி மாவட்டச் செயலாளர் மு.சென்னியப்பன், கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, உடுமலை ஒன்றிய தலைவர் பெரியார் பித்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் த.முருகேசன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம், தாராபுரம் நகரத் தலைவர் இரா.சின்னராசு, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குண சேகரன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங் கிணைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ச.கிரி, தி.மு.க. மாவட்டக் கழகப் பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, தி.மு.க. நகரச் செயலாளர் சி.வேலுச் சாமி, மாவட்டக் கழக செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியரின் சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்தியும், சேய் கழகமான தங்களது ஒத்துழைப்பு என்றென்றும் இருக்கும் என்றும் உறுதி யளித்துப் பேசினர். தி.மு.க. உடுமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.எம்.மெய்ஞானமூர்த்தி, தி.மு.க. உடுமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் ஆ.சதிஸ்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சியாம் பிரசாத், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தோழர் வே.இளங்கோவன், ம.தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.தமிழரசு, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் தா. அற்புதராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக நிமிர்வு கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். சரியாக 6.20 மணிக்கு ஆசிரியர் வருகை தந்தார். வாத்தியக் கருவிகள் முழங்க, வாண வேடிக்கைகள் நிகழ்த்தி ஆசிரியர் வரவேற்கப் பட்டார். மேடை ஏறுவதற்கு முன்னதாக, மேடைக்கு அருகில் இருந்த கழகக் கொடியை தமிழர் தலைவர் ஏற்றிவைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றிய பின், பிரச்சாரப் பயணப் புத்தகங்கள் வெளியீடு, விற்பனை நடைபெற்றது. ஆசிரியர் கைகளால் புத்தகங்கள் வாங்குவதைக் கண்டு கீழே இருந்தவர்கள் சிலர், ‘நானும் 1000 ரூபாய் கொடுத்து ஆசிரியர் கையால் புத்தகங்கள் பெற்றுக்கொள்கிறேன்’ என்று மேடை யேறினர். தோழர்கள் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் ஆசிரியருக்கு மரியாதை செய்தனர்.
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், ஆயிரக்கணக்கில் மக்கள் அமர்ந்திருக்கும் காட்சியில் அவரை ஈர்த்த சரிக்கு சரியாக மகளிர் அமர்ந்திருப்பதைக் கண்டு உற்சாகத்தால் உந்தப்பட்டு, நீதிக்கட்சி காலத்தில் மகளிர் நிலைமை எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்று ஒப்பீடு செய்து பேசி, ‘‘இந்த உரிமைகளை எல்லாம் பெற்றுத் தந்தவர் பெயர் தான் பெரியார்! பெற்றுத்தந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் கைதட்டலும், விசிலும் தூள் பறந்தது. அவர் விடவில்லை! அந்தத் திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்றைக்கிருக்கும் ‘திராவிட மாடல்' அரசு பெண்களுக்கு செய்து வரும் திட்டங்களைப் பட்டியலிட்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதன் எதிர்வினையாக பலத்த கைதட் டல்களை அள்ளினார். தொடர்ந்து அவர், பெண்களுக்கு நாற்காலி கொடுத்த இயக்கம் திராவிடர் இயக்கம்! உங்களைக் கல்லூரிக்கு அனுப்பிய இயக்கம் திராவிடர் இயக்கம்! உங்களை நீதிபதிகளாக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம்! இப்படி படாதபாடுபட்டு பெற்ற உரிமைகளை எல்லாம் தட்டிப்பறித்து, மீண்டும் உங்களை சட்டி, பானை செய்யச் சொல்கிறது மோடி அரசு; அதுதான் விஸ்வகர்மா யோஜனா என்ற மனுதர்ம யோஜனா என்று அதிரடியாகத் தலைப்புக்கு வந்தார். ‘‘அதுமட்டுமா? மனு தர்மம் என்ன சொல்கிறது? செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கவேண்டும்;. துணி வெளுக்கிறவன் மகன் துணி வெளுக்கவேண்டும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ள வேண்டும்; பார்ப்பான் மட்டும் படிக்க வேண்டும், இதுதானே?” என்று ஆசிரியர் கேள்வி கேட்டதும், மக்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றுகூட தெரியாமல் திகைத்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும், “திராவிடர் இயக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய காலம்வரை படி, படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், குஜராத் மாடல் ஆட்சி படிக்காதே என்கிறது. அதற்குத் தான் நீட்; அதற்குத்தான் கியூட்; அதற்குத்தான் நெக்ஸ்ட். அதையும் தாண்டி படித்து கல்லூரிக்கு வந்தால் அதையும் தடுக்க மனுதர்ம யோஜனா இருக்கு” என்று ஒட்டு மொத்த ஆரியத்தின் சூழ்ச்சியை ஒரு கோட்டுக்குள் அடக்கினார். மக்கள் அதை எளிதாக புரிந்து கொண் டனர்.
நிறைவாக “இப்படி உங்களை ஏமாற்ற நினைக்கிற மோடி ஆட்சி மீண்டும் வரலாமா? வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து தோழர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அத்தோடு தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடிமங்கலம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ச.கிரி அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆடை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். குடிமங்கலம் ஒன்றிய செய லாளர் வினோத்குமார் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். எழுச்சிகரமாகவே தொடங்கி மிகுந்த எழுச்சிகரமாகவே முடிந்தது பெதப் பம்பட்டி கூட்டம். அங்கிருந்து ஆசிரியர் வாகனம் புறப்பட்டபோது இடப்பக்கமாக நின்றிருந்த மக்கள் கண்ணாடி வழியே அமர்ந்திருக்கும் ஆசிரியருக்கு கைகளை அசைத்து விடை கொடுத்தனர்.
பழனியில்...
அடுத்து, அங்கிருந்து 100 கி.மீ. தூரமுள்ள பழனிக்கு வந்து சேர்ந்தார். மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பொன்.அருண் குமார் அனைவரையும் வரவேற்றார். மாநில தொழிலா ளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் புலவர் வீர.கலாநிதி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் அ.இராம கிருட்டிணன், ஒட்டன்சத்திரம் நகரத் தலைவர் வழக் குரைஞர் ஆனந்தன், ‘மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சி யாளர் சு.அழகர்சாமி, மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் பெ.இரணியன், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை செயலாளர் மு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். ஆசிரியர் வருகை தந்தபோது முனைவர் அதிரடி க.அன்பழகன் பேசிக்கொண்டிருந்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகரச் செயலாளர் ஆ.வேலுமணி, தமிழர் விடியல் கட்சி மாநில ஒருங் கிணைப்பாளர் உ.இளமாறன், மிஹிவிலி மாவட்ட இளை ஞரணி பொருளாளர் அ.அஜ்மத் அலி எம்.சி., த.பெ.தி.க. மாவட்டச் செயலாளர் பி.ஆர்.பி.வெற்றிவேந்தன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகை செல்வம், சி.பி.அய். மாவட்டக்குழு உறுப்பினர் சா.ல.அரவிந்தன், நகர்மன்றத் தலைவர் ந.கந்தசாமி, ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பழனி ராஜா, தி.இ.த.பே. மாவட்டத் தலைவர் அ,தமிழ்முத்து ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மழை மிரட்டிக் கொண் டிருந்ததால் மற்ற நிகழ்வுகள் சுருக்கமாக முடித்துக் கொள்ளப்பட்டது.
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தனது உரையில், ‘‘காலம் காலமாக திராவிட இன மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அதை மாற்றிக் காட்டத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது! சாதித்துக் காட்டியது!'' என்று 100 ஆண்டு கால எழுச்சி கரமான வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகவும், நன்றாக உறைக்கும்படியாகச் சொன்னார். அதேபோல், 70 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தது போல், மோடி அதைவிட ஆபத்தான மனுதர்ம யோஜனா என்ற ஜாதிக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார் என்று இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி, எத்தனை ஆண்டுகளானாலும் அவர்கள் நம்மை படிக்கவிடாமல் செய்வதில் குறியாக இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்தார். ஆனால், பார்ப்பனர்கள் மட்டும் காலம் காலமாக படித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுருக்கென்று தைக்கும் படியாக எடுத் துரைத்தார். காற்றும், மழையும் மிரட்டியது. மக்கள் திருப்பூரைப் போலவே நாற்காலிகளை குடைகளாக்கிக் கொண்டும், கடையோரங்களில் ஒதுங்கி நின்றும் ஆசிரியரின் உரையை செவிமடுத்தனர். சமஸ்கிருதம் எப்படி நமது கல்வியில் குறுக்கிட்டது? நீதிக்கட்சி எப்படி அதிலிருந்து நம்மை மீட்டது? என்பதை விளக்கினார். அந்த மீட்சி இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி வரை தொடர்கிறது. இதற்கு அடித்தளம் இட்டவர்களில் காமராஜரும் உண்டு என்று நன்றியுடன் குறிப்பிட்டார். மழையின் கடுமை அதிகமாக இருந்ததால், “இந்த மழையை விட ஜாதி கொடுமையானது. மழையில் நனைந்தால் கூட சரி செய்துகொள்ளலாம்” என்று குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்தார். இந்த விஷக்கிருமிகளை பெரியாரின் நுண்ணாடி மூலம்தான் பார்க்க முடியும். ஆகவேதான் நாங்கள் இதை உங்களுக்கு சொல்கிறோம் என்று இந்த எச்சரிக்கையை திராவிடர் இயகக்தைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டார்கள் என்பதை சொல்லாமல் சொன்னார். காலம் கனிந்து வந்திருப்பதையும், இந்தியா கூட்டணி உருவாகி இருப் பதையும் குறிப்பிட்டு, மோடி அச்சத்தில் இருக்கிறார். ஆகவே அவர் என்ன செய்வது என்று தெரியாமல், இந்தக் கொடுமையெல்லாம் விரைவில் முடியப்போகிறது. விடியல் பிறக்கப்போகிறது என்று மக்களுக்கு ஆறுதல் சொன்னார். ஏற்கெனவே தென்னாட்டில் பா.ஜ.க.வுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது. வடநாட்டிலும் பா.ஜ.க.வைப் பற்றி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விடியலுக்குக் காரணத்தையும் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பகுத்தறிவாளர் கழகத் தோழர் சுப்பிரமணி, திராவிடர் கழகத் தோழர் ஆ.திருச்செல்வம், மாவட்டத் துணைத் தலைவர் ச.அங்கப்பன், பொதுக்குழு உறுப்பினர் சத்திரப்பட்டி பெ.பழனிச்சாமி, பழனி நகரத்தலைவர் சி.இராதா கிருஷணன், கணக்கன்பட்டி சின்னத்துரை, மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.கருப்புசாமி, மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் ப.பாலன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் குண.அறிவழகன், கணக்கன்பட்டி வழக்குரைஞர் செல்லத்துரை, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஒடவை.சம்பத், பழனி ஒன்றியத் தலைவர் பாப்பம்பட்டி சீனிவாசன், நகர இளைஞரணித் தலைவர் பழனி செந்தில், நகர இளைஞரணி மு.இரகுமான், வேடசந்தூர் சி.மாரியப்பன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் இயக்குநர் புரூஸ் பெரியார், ஒன்றிய இளை ஞரணித் தலைவர் வேலு.சக்திவேல், அழகாபுரி சேகர், மாணவர் கழகத் வேலூர் கணேசன், மாவட்ட இளைஞரணி பெரியார் பத்மநாதன், ஆயக்குடி கிளைத் தலைவர் க.நாகராசு, பெதப்பம்பட்டி ஒன்றியத்தலைவர் ச.பாலசுப்பிரமணி, மாணவர் கழகத் கணக்கன்பட்டி அருண், க.மதன பூபதி ஆகியோர் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டு நிகழ்ச்சி சிறக்கச் செய்தனர்.
நிறைவாக சட்டக் கல்லூரி மாணவர், மாநில துணை அமைப்பாளர் அ.தில்ரேஸ்பானு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்து ஆரியசங்காரன் ஆசிரியர் பாடி வீடமைத்தார்.
No comments:
Post a Comment