திருச்சி புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

திருச்சி புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள  ஜோசப் பள்ளி மைதானத்தில் 4 ஆவது நாளாக பிரம் மாண்டமாக நடைபெற்று வரும் திருச்சி புத்தகத் திரு விழா 2023ல் புத்தக அரங்கு கள் மற்றும் கலை நிகழ்ச்சி களை நேற்று (26.11.2023) ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தையும்,  மாணவர்களுக்கான வான் நோக்குதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதையும்       ஏராளமான மாணவர்கள் கண்டு களித்தனர்.

மரு.கு.சிவராமன் மாநில திட்டக்குழு உறுப்பினர் அன்னம் + அக்கறை = ஆரோக்கியம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் குழந்தைகளும் கதைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் தியாகசேகர் ஒரிகாமி கலைஞர்அவர்களின் ஓரிகாமி பழகுதல் என்ற நிகழ்ச்சியும், கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் நவ ஜீவனின் கவிதை நிகழ்ச்சியும், மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், புத்தகத் திருவிழா அரங்கிற்கு வருகை தந்து பார்வையிட்டு, புத்தக திருவிழா அரங்கில் புத்தகம் தானம் பெற அமைக்கப் பட்டுள்ள அரங்கில் வைக்கப் பட்டுள்ள பெட்டியில் புத்தகத் தை கொடையாக அளித்தார். அதனைத் தொடர்ந்து மரு.கு .சிவராமன் மாநில திட்டக்குழு உறுப்பினர்அவர்கள் அன்னம் + அக்கறை = ஆரோக்கியம்என்ற தலைப்பில் ஆற்றிய உரையை பொதுமக்களுடன் அமர்ந்து கேட்டு இரசித்தார். இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டினார். திருச்சி புத்தகத் திருவிழாவில் இன்று(27.11.2023) தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்செயலர் வெ.இறையன்பு   எளிமையே ஏற்றம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற உள் ளார். சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் கதை சொல்லி கதை எழுதும் பயிற்சி என்ற நிகழ்ச்சியும், கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் சுரபி ராமச்சந்திரன்  கவிதை நிகழ்ச்சியும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.


No comments:

Post a Comment