தொடரும் ரயில் விபத்துக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தொடரும் ரயில் விபத்துக்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தது

தர்பங்கா, நவ.16 டில்லியில் இருந்து தர்பங்கா சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதன் காரணமாக ரயில் உடனடியாக நிறுத்தப் பட்டதால் காயங்களோடு பயணிகள் தப்பினர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது. 

தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், "டில் லியில் இருந்து பீகார் சென் றுக் கொண்டிருந்த ரயிலில் இரண்டு பெட்டி களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத் துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காய மடைந்தவர்களுக்கு மருத் துவம் வழங்கப்படுகிறது" என்றார். ஆனால், ஒரு பெட்டியில் மட்டுமே தீப் பிடித்ததாக வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், "புது டில்லி- தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி எண் எஸ்1ல் இருந்து எட்டாவா அருகே சராய் போபட் சந்திப்பில் உள்ள காவலர் புகை வெளியேறு வதைக் கவனித்தார். 

பின்னர், ரயில் உடனடி யாக நிறுத்தப்பட்டு, பய ணிகள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர். அனை வரும் பாதுகாப்பாக உள் ளனர். தற்போது வரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை," என்றார். 

 இந்த ஆண்டுமட்டும் பயங்கர ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வு நடவடிக்கையும் எடுக்காமல் வந்தே பாரத் ரயிலை மட்டும் விடுவதில்  மோடி அரசு செயல் பட்டுக்கொண்டு இருப்பது கேள்விக்குறியாய் உள்ளது.


No comments:

Post a Comment