சென்னை, நவ. 25- இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு மய்யமாகவும், சென்னையின் மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை, பாலியல் நல்வாழ் வுக்கான இலவச பாலியல் ஆரோக்கிய பரிசோதனை முகாமை (நாளை) 26ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது மருத்துவமனை வளாகத்தில் நடத்த உள்ளது. இந்த பரிசோதனை முகாம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
பரிசோதனை முகாமிற்கு வரும் ஆண்களுக்கு டெஸ் டோஸ்டிரோன், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் உள் ளிட்ட பரிசோதனையுடன் எண்டோதீலியல் ஸ்கேன் மற் றும் ஆண்ட்ரோலஜி ஆலோசனையும் இம்மருத்துவ மனையின் சிறுநீரகம் மற்றும் ஆண்ட்ரோலஜி நுண் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சஞ்சய் பிரகாஷ் தலைமையில் விரிவாக வழங்கப்பட உள்ளது. 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் அனைத்தும் இந்த முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப் பட உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பயணிகள் வாகனம் அறிமுகம்
சென்னை, நவ. 25- சுற்றுச்சூழலுக்கு உகந்த 171 கி.மீ. தொலைவுக்குச் செல்லக்கூடிய ஈகோ டிரிஃப்ட் 350 ரக மின்சார இரு சக்கர வாகனத்தை, பியூர் இ.வி. நிறுவனம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் வதேரா கூறுகையில், "இந்தியா மக்க ளுக்கு நடைமுறை சாத்தியமான, நிலைத்த போக்குவரத்து தீர்வுகளை வழங்க பியூர் இ.வி.-யில் நாங்கள் உறுதி யெடுத்துள்ளோம். எங்கள் விசுவாசமான நுகர்வோர் தளத்திற்கு மதிப்புமிக்க பொருட்களை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கு ஈகோ டிரிஃப்ட் 350 மற்றுமொரு சான்றாகும். இது 110 சிசி பிரிவில் நம்பகமான - சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வாகனமாகத் திகழ்ந்து, இந்திய போக்குவரத்து முறையை எதிர்காலத்தில் மறுவரையறை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment