சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை, நவ. 17- மார்க்சிஸ்ட் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு ஒருவாரம் துக்கம் கடைப் பிடிக்க வேண்டும். சங் கரய்யா சமரசமின்றி பின் பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்று வோம் என்று கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் 16.11.2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான என்.சங்க ரய்யா (102), வயது மற் றும் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கி றோம். இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மகத் தான தலைவருக்கு கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி இரங்கல் செலுத்துகிறது.

1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் முக்கியப் பங்காற் றிய தலைவராக என்.சங்கரய்யா இருந்தார். அகில இந்திய விவசாயி கள் சங்கத்தை வளர்த் தெடுத்த தலைவர்களில் ஒருவரான என்.சங்க ரய்யா, அகில இந்திய பொதுச் செயலாளர் மற் றும் அகில இந்திய தலை வர் உள்ளிட்ட பொறுப்பு களை வகித்தவர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நெடுங்காலம் பணியாற்றி யவர். தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை உருவாக்கி முதல் விருதை தோழர் சங்கரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்த நாளின் போது வழங்கி சிறப்பித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனைத்து கிளைகளும் கட்சியின் கொடியை அரைக்கம்பத் தில் பறக்கவிடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளை யும் ரத்து செய்து, ஒரு வாரம் துக்கம் கடைப் பிடிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

சங்கரய்யா சமரச மின்றி பின்பற்றிய புரட்சி கர உணர்வு மற்றும் கொள்கைகளை உறுதி யாக பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment