புதுதில்லி, நவ. 12- அதானியின் ஊழல் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் கட்டுரை எழுதிய விவகாரத்தில், ‘பைனான் சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின், க்ளோ நினா கார்னிஷ் ஆகியோரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோருக்கு, குஜ ராத் காவல்துறை அழைப் பாணை அனுப்பியிருந்த நிலை யில், தங்கள் மீதான நடவடிக் கைக்கு எதிராக, அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டி ருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர். கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 10.11.2023 அன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணை தேதி வரை, அதாவது டிசம்பர் 1 வரை, ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்தி ரிகையாளர்கள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக் கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேநேரம், பத்திரிகையா ளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோர், விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்தினர்.
‘மறைந்துள்ள அதானி முதலீட்டாளர்களை வெளிப் படுத்தும் ரகசிய ஆவணச் சுவடு’ என்று ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் கட்டுரை வெளியிட்டி ருந்தது. ஆனால், இந்த கட்டு ரையில் கூறப்பட்டுள்ள விவ ரங்கள் பொய்யானவை என்று அதானி குழும நிறுவனங்க ளில் முதலீடு செய்திருக்கும் முதலீட் டாளர் ஒருவர் புகார் அளித்த தாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையிலேயே, ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏட்டின் டில்லி செய்தியாளர் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின் மற்றும் அதன் மும்பை செய்தியாளர் க்ளோ நினா கார்னிஷ் ஆகியோருக்கு குஜ ராத் காவல்துறை அழைப் பாணை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பத்திரிகை யாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரைஞர் சித்தார்த் அகர்வால், சம்பந்தப்பட்ட கட்டுரையை எழுதியவர்கள், தற்போது அழைப்பாணை அனுப்பப்பட்ட மனுதாரர்கள் அல்ல என்று கூறினார். மேலும், கடந்த வாரம், இதேபோன்ற (அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக் கையை முன்வைத்து) எழுதப் பட்ட கட்டுரைக்காக, குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதில் இருந்து மற்றொரு பத்திரிகையாளர் ரவி நாயர் மற்றும் ஆனந்த் மங் னாலே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பாது காப்பு வழங்கியதையும் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment