சென்னை, நவ. 4- ஊனமுற்ற சாதனையாளர்களின் விடாமுயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஒருங்கிணைந்து நடத் தும் 22ஆவது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2024க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும், கவின்கேர் எபிலிட்டி விருதுகள் எமினன்ஸ், மற்றும் கேவின்கேர் எபிலிட்டி மாஸ்டரி விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, அதன் 21ஆம் ஆண்டு பயணத்தில், 91 மாற்றுத் திறனாளி சாதனை யாளர்களை சிறப்பித்துள்ளது. தற்போது இந்த விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி 20.11.2023 ஆகும்.
ஆன்லைன் மூலம் பரிந்துரைக்க www.abilityfoundation.org <file:///C:/Users/Brand-Comm/Downloads/www.abilityfoundation.org> அல்லது www.cavinkare.com <file:///C:/Users/Brand-Comm/Downloads/www.cavinkare.com> இணையத்தளங்களை அணுகலாம்.
மாற்றுத் திறனாளிகளாக இருந்தபோதிலும் தங்களது கனவுகளை தைரியமாக சாதித்த தனி நபர்களின் சாதனைகளை அங்கீகரித்து கவின்கேர் எபிலிட்டி விருதுகள் கொடுத்து சிறப்பிக்கப்படுகின்றனர். மேலும் இது இன்று நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளி சாதனையாளர்கள் மத்தியில் பெரிதும் போற்றப்படும் விருதாகும். விருது பெறும் சாதனையாளர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை மற்றும் அவர்களின் சாதனைகளைப் பாராட்டி பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment