பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, நவ. 27- திமுக இளைஞரணி செயலா ளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (27.11.2023) காலை பெரியார் திட லுக்கு வருகைதந்தார். 

பெரியார் அருங்காட் சியகத்தில் இருந்த திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்க ளைச் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற் றார். 

தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்தையும், பாராட் டையும் தெரிவித்தார்.

முன்னதாக பெரியார் திடலுக்கு வருகைதந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கழகத்தின் சார்பில்  கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் வரவேற்ற னர்.

தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளி கள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வீ.மெய்யநாதன், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு ரைஞர் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன் மற்றும் எழும்பூர் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்நீதி மன்ற வழக்குரைஞர் இந்து அறநிலையத்துறை சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவ. இரவிச்சந் திரன், புரசை ரங்கநாதன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் உடனிருந்தனர்.

திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் திமுக மகளிர் அணி, இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக குழுமி யிருந்தனர். 

வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மனிதநேய உதவிநாளாக கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலா ளர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற விழாவில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி அளித்து பாராட்டும், மாணவச் செல்வங்க ளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவை  அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

No comments:

Post a Comment