“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்!” மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலடி ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்!” மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலடி !

ஜெய்ப்பூர், நவ. 11- தெலங் கானா, சத்தீஸ்கர், மிசோ ரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநி லங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 

இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு கிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7ஆம் தேதி தேர் தல் நடைபெற்றது.

தொடர்ந்து மீத முள்ள ராஜஸ்தான், மத் தியப் பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் அனைத்துக் கட்சியின ரும் பிரச்சார பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ் தானில் தற்போது தேர் தல் பிரச்சாரத்தை கட்சி கள் மேற்கொண்டு வருகி றது. அதன்படி நேற்று (10.11.2023) பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுகை யில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தான் குற் றங்கள் அதிகரித்து காணப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கன் ஹையா லால் கொலை செய்யப்பட்டதை விமர் சித்தார்.

இந்த நிலையில், பிர தமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட். இது குறித்து அவர் பேசியதாவது, "பிர தமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். அவருக்கு தவறான செய் திகளை கூறுகின்றனர். ஜனநாயக நாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. ஒரு வேளை ராஜஸ்தானின் சூழலை கண்டு அவர் பதற் றத்தில் அப்படி கூறினாரா என்றும் தெரியவில்லை. பாஜகவினர் தான் கன் ஹையா லாலை கொலை செய்தனர்.

அந்த வழக்கில் நாங் கள் குற்றம்சாட் டப்பட் டவரை 2 மணி நேரத்தில் பிடித்தோம். ஆனால் அன்று இரவே அவரை பாஜகவை சேர்ந்தவர்கள் தான் ஜாமினில் எடுத்த னர். அதோடு இந்த வழக்கை உடனடியாக ழிமிகி தங்கள் வசம் எடுத்துக் கொண்டது. தற்போதும் இந்த வழக்கை ழிமிகி விசா ரிக்கிறது. இப்போது இதன் விவரங்களை ழிமிகி தெரிவிக்க வேண்டும். மோடி இவ்வாறு பேசு வதை தவிர்க்க வேண்டும்." என்றார்.

No comments:

Post a Comment