ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அதானி பிரச்சினையில் பாஜக பயந்து விட்டது. எனவே பிரச்சினைகளை திசை திருப்புகிறது - ராகுல் காட்டம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க அறிவுறுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு வழக்கு. உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

* ஆர்.எஸ்.எஸ்.-இன் விருப்பத்திற்கு ஏற்ப பாஜக சர்வாதிகாரத்தை  நோக்கிச் செல்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* என்னை கைது செய்ய முடியுமா என சவால் விட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, நவம்பர் 3ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* பல்வேறு மதப் பிரிவினரிடம் பகையை வளர்த்ததாக பாஜகவின் அனில் ஆண்டனி மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு.

* கவுதம் அதானிக்கு சொந்தமான தொழில்துறை குழுமத்திற்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் - அய்.போன் நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மோடி அரசு மீது கண்டனம்.

தி இந்து: 

* கருநாடக மாநிலத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரான தத்துவங்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மாநில முதல மைச்சர் சித்தராமையா எச்சரிக்கை.

தி டெலிகிராப்:

* அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் தேர்தல் பத்திரத் திட்டம், ஊழலை ஊக்குவிப்பதால், "ஜனநாய கத்தை அழித்துவிடும்" என்றும், ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தாது என்றும், இந்தத் திட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.

* உத்தரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில், சிறுபான்மை சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி மாணவர்களை அறையத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் மீது வழக்குத் தொடர உத்தரப் பிரதேச அரசு உடனடியாக முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment