ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

ஒசூர் மாவட்ட கலந்துரையாடல்

ஓசூர், நவ. 9 - 8.11.2023 அன்று ஒசூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் முன்னி லையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி அனைவ ரையும் வரவேற்று பேசினார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி, மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் வா.செ.மதிவாணன், ஒசூர் மாநகர செயலாளர் பெ. சின்னராசு, ராசேந்திரன், பூபதி ஆகியோர் கருத் துரைக்கு பின் தலைமை கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி மாவட்ட கழக வளர்ச்சி குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாளான டிசம்பர் 2இல் அதிக அளவில் விடுதலை சந் தாக்களை திரட்டி தந் திட வேண்டியும். கழக குடும்பத்தினர் சந்திப்பு கூட்டத்தை விடுமுறை நாளில் நடத்திட வேண் டும் எனவும் பேசினர்.

புதியதாக பொறுப் பேற்றுள்ள மாநில அமைப்பு செயலாளருக்கு பொதுக்குழு உறுப்பினர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித் தார். புதியதாக தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட பூபதி அவர்க ளுக்கு அமைப்பு செயலா ளர் பயனாடை அனி வித்து வரவேற்றார்.


No comments:

Post a Comment