ஆன்லைனில் விளையாடப் படும் ரம்மி, போக்கர் விளை யாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டமசோதா நிறைவேற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய் யக்கோரி ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்களின் கூட்ட மைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகி யோர் 10.11.2023 அன்று தீர்ப் பளித்தனர். அதில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது.
ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளை யாட்டுகளை நல்வாய்ப்புக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம், நல்வாய்ப்புக் கான ஆன்லைன் விளையாட்டு களை தடை செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப் படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் தடைச் சட்டத் திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்று வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
நாங்கள் அவரிடம் எங் களுக்கு உரிமை உள்ளது என் பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் நீதிமன்றம் நாங் கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.
இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்கு முறைப்படுத்துவது என்பது எந் தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக் களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்கு முறைப் படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளை யாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளா கிறார்கள்.
அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள் ளோம்.
எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக் கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திற மைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை.
அது ஒரு ப்ரோக்ராம். விளை யாட்டை எப்படி வேண்டு மென்றாலும் மாற்றி அமைக் கலாம் அது திறமை அடிப் படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.
ஆனால் நாங்கள் நீதிமன் றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்க வில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்குரைஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத் திருந்தாலும் கூட நீதிபதி அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்தி படுத்தும் வகையிலும் கருத் துகளை எடுத்து வைக்கவில் லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.
இந்த வழக்கில் மேல்முறை யீடு செய்வது குறித்து சட்டத் துறை பரிசீலனை செய்யும். மேல் முறையீடு தேவை என்று சொன் னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்குரைஞர்களுடைய கருத்து களைப் பெற்று அடுத்த நடவ டிக்கை தொடரும்.
முறைப்படுத்துவது சட்டத் திலே உள்ளது கமிட்டி அமைக் கின்றோம் அந்த விளையாட் டுகளை ஒழுங்குமுறை படுத்து கின்றோம்.
சட்டப்படி ஒழுங்குமுறை படுத் துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.
No comments:
Post a Comment