காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சென்னை,நவ.5- உலக சுகாதார நிறுவ னம் நிர்ணயித்த வரம்பு களை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.இந்த நிலையில்  காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

காற்று மாசு காரண மாக சென்னை மற்றும்  டில்லியில் வசிப்பவர் களுக்கு ‘டைப் 2’ நீரிழிவு  நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.பன்னாட்டு பத்திரிகைகளில் வெளியான 2 ஆய்வு முடிவுகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. 

இது  தொடர்பாக சென்னையில் 6,722 பேரிடமும், டில்லியில் 5,342 பேரிடமும் ஆய்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். 2010 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.  தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மய்யம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.  மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் காற்று மாசு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment