மத்தியப் பல்கலைக் கழகமா? சங் பரிவாரின் கிளைக் கழகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

மத்தியப் பல்கலைக் கழகமா? சங் பரிவாரின் கிளைக் கழகமா?

திருவாரூர், நவ 21 திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 'ஜெய் சிறீ ராம்' என்ற பேனர்  மற்றும் கோலத்தோடு துணைவேந்தரை வைத்துக்கொண்டு யாகம் நடத்தி தீபாவளி கொண்டாடப்பட்டது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

17 ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது ‘ஜெய் சிறீ ராம்’ என்று எழுதப்பட்ட வாசகம் பொருந்திய பேனர்  வைக்கப்பட் டிருந்தது. இது தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது மாணவர்கள் மத்தியில் மதத்தைப் புகுத்து கிறது என்று பல்கலை நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரேயொரு மத்திய பல்கலைக் கழகமாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந் துள்ளது. இது மறைந்த மேனாள் முதலமைச் சரும், திமுக தலைவருமான கலைஞர் அவர் களின் பெரும் முயற்சியில் கிடைத்தது. இந்த சூழலில் இங்கு நடைபெற்ற தீபாவளி கொண் டாட்டத்தின்போது, 'ஜெய் சிறீ ராம்' வாசகம் எழுதப்பட்ட பேனர் உள்ளிட்டவை ஆங் காங்கே காணப்பட்டுள்ளன.

மேலும் மேடைகளில், கோலங்களில் எல் லாம் இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. அதோடு பார்ப்பனர்களை அழைத்து வந்து யாகம் செய்து தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் இந்தச் செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதிலும் அந்த பூஜையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கிருஷ்ணா கலந்துகொண் டுள்ளார்.

இந்நிலையில், துணை வேந்தர் கிருஷ் ணாவுக்கு எதிராகவும், மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்திய பல்கலைக்கழக நிர்வாகத் துக்கு எதிராகவும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிழற்படங் கள், காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "அரசின் செலவில் நடைபெறும் பல்கலைக் கழகங்களில் மத விழாக்களைப் புகுத்தியது முற்றிலும் தவறு. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது" என்று மாணவர் சங்கங்கள் கண்டனங் களைத் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment