உண்மை கண்டறியும் சோதனை நடத்த பத்து பேருக்கு அழைப்பாணை
சிபிசிஅய்டி காவல்துறை நடவடிக்கை
புதுக்கோட்டை, நவ,26 வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்து வதற்காக 10 பேருக்கு சிபிசிஅய்டி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்த விவகாரத்தில் சாட்சிகள்யாரும் இல்லாத தால், அறிவியல்பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 31 பேர் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட் படுத்தப்பட்டார். இந்நிலையில், இவர்களில் 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசி அய்டி காவல்துறையினர் 24.11.2023 அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
அதில், “வேங்கைவயல் வழக்குவிசாரணை நடை பெற்று வரக்கூடிய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வரும் 28 ஆம் தேதி ஆஜராகி, உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பது குறித்த தங்களின் கருத்தை தெரிவிக்கலாம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இல்லை எனகருத்து தெரிவிப்போர், அதற்குரிய ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment