திருவனந்தபுரம், நவ. 1- கேரள மாநிலம் களமச் சேரியில் 29.10.2023 அன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கிறிஸ் தவ மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்பு கேரளத் தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.
இந்நிலையிலேயே, களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை கேரளம் ஒரு மனதுடன் ஒன்று பட்டு எதிர் கொள்ளும்; ஒருபோதும் வெறுப் புணர்வை பரப்ப அனுமதிக்காது என்று முதலமைச்சர் கூட்டிய அனைத்து கட் சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டு உள்ளது. தீர்மானத்தில் கூறப் பட்டிருப்பதாவது:
அமைதி, சகோதரத்துவத்தை உயிரைக் கொடுத்தும் காப்போம்
உலகின் கவனத்தில், கேரளத்தை மய்ய மாக மாற்றியதில், அமைதி, சகோ தரத்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய சிறப்பு சமூக சூழ்நிலைகள் முக்கிய காரணிகளாகும். இந்தச் சூழலை தங்கள் உயிரை விலையாகக் கொடுத் துப் பேணுவதில் கேரள மக்கள் உறுதி பூண் டுள்ளனர். ஆனால், கேரளத்தின் பெருமைக்குரிய இந்தப் பொதுச் சமூகச் சூழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் களும், அதை ஒழிக்கத் துடிப்பவர்களும் இருப்பதை நாம் அறிவோம். எந்த விலை கொடுத்தாவது, கேர ளத்தில் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் முயற்சிகளை முறியடித்து, ஒரே மன துடன் முன்னேறுவதை உறுதி செய்வோம்.
மக்களைத் துண்டாடுவோரின் முயற்சிகளை முறியடிப்போம்!
பரஸ்பர நம்பிக்கை, ஒருவருக்கொ ருவர் சார்ந்திருத்தல் மற்றும் கூட்டு வாழ்க்கை என்ற சகாப்தத்தை, அவ நம்பிக்கை மற்றும் சகிப்பின்மையின் நச்சு விதைகளை விதைத்து அழிக்கும் முயற்சிகள் அனைத்தும் வலிமை யுடன் எதிர்க்கப்படும் என்பதை இக்கூட்டம் ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது.
ஊகங்கள், கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒருவரையொருவர் அந்நியப் படுத்தும் முயற்சிகளை நம் சமுதாயத் தில் உள்ள ஒவ்வொருவரும் முளையி லேயே நசுக்க முன்வர வேண்டும்.
அனைத்து மத நம்பிக்கை உள்ளவர் களும் தங்கள் நம்பிக் கைகளை கடைப் பிடிக்க அனைத்து சுதந்திர மும் உள்ள சமூகம் இது. மதச்சார்பின்மை, தனி மனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு போன்ற அரசமைப்பு சாசனத்தின் அடிப் படைக் கொள்கைகளின் அடிப்படையிலான இந்த வகையான சுதந்திரத்தின் பாதுகாப்பு இங்கு எல்லா வகையிலும் உறுதி அளிக்கப்படும். எந்த மதத்தின் மீதும் வெறுப்புணர்வை பரப் பும் சூழ் நிலையை அனுமதிக்கக் கூடாது.
எந்த சமூகத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பதை அனுமதிக்க முடியாது
எந்த ஒரு நபரையும், எந்த சமூகத்தை யும் எந்த நம்பிக்கை கொண்ட சமூகத்தையும் சந்தேகத்துடன் பார்க்க அனுமதிக்காதீர்கள். இவ்வாறான எண் ணங்களைப் புகுத்த முய லும் தீய சக்திகளே நாட்டுக்கும் மக்களுக்கும் பொது எதிரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கருதுகிறது. ஒவ் வொரு தனிமனிதனும், ஒவ்வொரு அரசியல் இயக்கமும், ஒவ் வொரு அமைப்பும் இந்த சிந்தனையை சமுதாயம் முழுவதும் பரப்பு வதற்கான உறுதியான முயற்சிகளில் முன்வர வேண் டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள் கிறது.
மதச்சார்பின்மை பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியாது
தனிப்பட்ட சம்பவத்தின் அடிப் படையில் கேரளத்தை, அதன் பெருமை மிக்க மதச் சார்பற்ற கலாச்சார பாரம் பரியம் மற்றும் சமூக தனித்து வத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சி யையும் தனிமைப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள், யூகங்கள் பரப்புதல் மற்றும் வதந்தி பரப்புதல் ஆகியவற்றில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இக்கூட் டம் கேட்டுக்கொள்கிறது.
வதந்திகளைப் பரப்புவதற்குப் பின் னால் உள்ள தேச விரோத மற்றும் மக்கள் விரோத தீமையை அடையாளம் காண ஒவ்வொரு மனமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்விஷயத்தில் கேரளம் ஒருமன தாக இருப்பதையும், அனைத்து நிலை களிலும் அமைதி, மத நல்லிணக்கம், வேறுபாடுகளுக்கு அப் பாற்பட்ட மதச் சார்பற்ற நல்லிணக்கம் வலுப்பெறும் என்பதையும் இந்தக் கூட்டம் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு தீர்மா னத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment