சென்னை, நவ. 17- ரஷ்யாவின் சிறந்த பல்கலைக் கழகங் களில் முழு நிதியுதவியு டன் கல்வி கற்க விரும்பும், இந்திய மாணவர்கள், 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான ரஷ்ய அரசின் உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ரஷ்யன் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கட்டமைப்புக் குள் இளநிலை, முதுகலை, முனைவர் பட்டங்களுக்கு 200 பேர் நிதி உதவிகளை பெறலாம் என்று கூறப்பட்டு இருக் கிறது.
இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் education-in-russia.com என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு சென்னையில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் அலுவலகத்தை நேரிலோ அல்லது russlangcentr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அணுகி தெரிந்து கொள் ளலாம்.
No comments:
Post a Comment