புதுடில்லி,நவ.21- நீதிபதிகளின் நியமனத்துக்காக கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் ‘குறிப் பிட்டு’ தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளிக்கும் ஒன்றிய அரசின் அணுகு முறை, நீதிபதிகளின் பணிமூப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
பஞ்சாப் - _ அரியானா உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க 5 வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதில் 2 சீக்கிய வழக்குரைஞர்களின் பெயர்களுக்கு ஒப்புதல் வழங்கப் படாதது குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
நீதிபதிகளின் நியமனம், பணியிடமாற்றம் தொடர்பான உச்சநீதி மன்ற கொலீஜியம் குழுவின் பரிந் துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய அரசு காலதாமதம் செய் வதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசா ரணை, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 20.11.2023 அன்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது, உயர்நீதிமன்ற நீதி பதிகளின் பணியிடமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அண்மையில் அனுப்பப்பட்ட 11 பரிந்துரைகளில் 5 பெயர்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்ட தாகவும், 6 பெயர்கள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் கூறுகையில், ‘பல்வேறு உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்துக்காக அண்மையில் அனுப்பப்பட்ட பரிந்துரைகளில் 8 பெயர்களுக்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இவர்களில் சிலர், நீதிபதிகளாக நியமனம் பெற்றவர்களைவிட மூத்தவர்கள்.
கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் குறிப்பிட்டு தேர்ந் தெடுத்து ஒப்புதல் அளிக்கும் அணுகுமுறையை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கிறது. இதன் கார ணமாக நீதிபதிகளின் பணிமூப்பு பாதிக்கப்படுகிறது. இது நல்ல அம்சமாக இல்லை’ என்றனர்.
இதையடுத்து, ‘தேர்தல்கள் கார ணமாக சில தாமதம் ஏற்பட்டுள் ளது; கொலீஜியத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த விவகாரத்தை ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் கழித்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அட் டர்னி ஜெனரல் வெங்கடரமணி கோரினார்.
இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசார ணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment