பயோமெட்ரிக்
மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மருத்துவப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு இமெயில் முகவரிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
இலக்கியம்
சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் பங்கேற்கலாம் என தமிழ் இணைய கல்விக் கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவுத் துறை உதவியாளர்கள் பணியிடங் களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய் தவர்களும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தகவல்.
தள்ளி வைப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழ்நாடு முழுவதும் நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழ்நாடு முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நோய் பாதிப்புகளி லிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தகவல்.
திட்டப்பணிகளை...
ரயில் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்விக்கடன்
தமிழ்நாடு அரசும், வங்கிகளும் இணைந்து தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நாளை (18.11.2023) மாபெரும் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இரட்டைப் பட்டப்படிப்பு
சென்னை அய்.அய்.டி. மற்றும் சிறீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, எம்.டி., பிஎச்.டி., ஆகிய இரட்டை பட்டப் படிப்பு பாடத்திட்டத்தை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (16.11.2023)கையெழுத்தானது.
No comments:
Post a Comment